"Everyday is a learning process"
தினம் ஒரு தகவல் மிதி வண்டி:(BICYCLE) மனித சக்தியை கொண்டு இயக்கப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்கரங்களை கொண்டு இயங்கும் ஊர்திகளுக்கான பெயராகும். அதிலிருந்து பிரிந்து வந்தது தான் பைசைக்கிள் எனப்படும் மிதி வண்டி. ஆரம்ப காலத்தில் மிதிவண்டிகளின் சர்க்கரங்கள் உலோகம் மற்றும் கட்டைகளால் ஆக்கப்பட்டிருந்தன. இதை ஓட்டும் போது ஏற்படும் அதிர்வுகளை குறைக்க கட்டை சர்க்கரத்தின் மேல் இரப்பர் பட்டை ஒட்டப்பட்டன, 1887- ல்ஜான் பாய்ட் டன்லப் (John Boyd Dunlop) என்பவர் கட்டை சர்க்கரத்துடனான சைக்கிளை ஓட்டுவது தனது மகனுக்கு தலைவலி உண்டாகிறது என்ற காரணத்திற்காக காற்றடைத்த டயரை உருவாக்கினார். இது அதிர்வுகளை குறைத்ததோடு வண்டியின் வேகத்தையும் அதிகப்படுத்தியதால் அதிவிரைவில் பிரபலமானது. இதன் மூலம் ( Dunlop Pneumatic Tyre Co. Ltd ) டன்லப் ந்யுமாடிக் டயர் கம்பெனி லிமிடெட் என்ற கம்பெனி 1890 ல் உருவானது. ஆனால் இதற்கான காப்புரிமையை பெ...