பழைய சோறு ‘‘ஒரு நாட்டின் தட்பவெப்பத்துக்கு ஏற்ற உணவுதான் அங்கே வாழ்கிற மக்களுக்கான சரியான உணவு. அந்த வகையில் வெப்பம் மிகுந்த நம் நாட்டில் காலை உணவை குளிர்ச்சியாகத் தொடங்குவதே நல்லது. அதற்கு பழைய சாதம் சரியான தேர்வு என்று சொல்லலாம். பழைய சோற்று தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் குளர்ச்சி அடைந்து பசியைத் தூண்டும். இரவில் நீர் ஊறிய சோற்றை அந்த நீரோடு அருந்தினால் ஆண்மை பெருகும், தேகத்தில் ஒளி உண்டாகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பழைய சோற்றுடன் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், பிரம்மை நோய்கள் நீங்கும்".
Posts
"Everyday is a learning process"
- Get link
- X
- Other Apps
தினம் ஒரு தகவல் மிதி வண்டி:(BICYCLE) மனித சக்தியை கொண்டு இயக்கப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்கரங்களை கொண்டு இயங்கும் ஊர்திகளுக்கான பெயராகும். அதிலிருந்து பிரிந்து வந்தது தான் பைசைக்கிள் எனப்படும் மிதி வண்டி. ஆரம்ப காலத்தில் மிதிவண்டிகளின் சர்க்கரங்கள் உலோகம் மற்றும் கட்டைகளால் ஆக்கப்பட்டிருந்தன. இதை ஓட்டும் போது ஏற்படும் அதிர்வுகளை குறைக்க கட்டை சர்க்கரத்தின் மேல் இரப்பர் பட்டை ஒட்டப்பட்டன, 1887- ல்ஜான் பாய்ட் டன்லப் (John Boyd Dunlop) என்பவர் கட்டை சர்க்கரத்துடனான சைக்கிளை ஓட்டுவது தனது மகனுக்கு தலைவலி உண்டாகிறது என்ற காரணத்திற்காக காற்றடைத்த டயரை உருவாக்கினார். இது அதிர்வுகளை குறைத்ததோடு வண்டியின் வேகத்தையும் அதிகப்படுத்தியதால் அதிவிரைவில் பிரபலமானது. இதன் மூலம் ( Dunlop Pneumatic Tyre Co. Ltd ) டன்லப் ந்யுமாடிக் டயர் கம்பெனி லிமிடெட் என்ற கம்பெனி 1890 ல் உருவானது. ஆனால் இதற்கான காப்புரிமையை பெ...